அழகியசிங்கர்/இருந்தாலும்…

இப்போது
எழுதிக் கொண்டிருக்கும்
கவிதை
95 வது கவிதை
இத்துடன் கவிதை எழுதுவதை
நிறுத்தி விடுவேனா
நிச்சயமாக இல்லை
என் குறிக்கோள்
1000 கவிதைகள் எழுத
வேண்டும்
ஏற்கனவே 500 கவிதைகளைப்
புத்தகமாகக் கொண்டு வந்து விட்டேன்
இன்னொரு புத்தம்
கொண்டுவர
இன்னும் 100 கவிதைகள்
வேண்டும்
நூறு கவிதைகள் எட்ட
5 கவிதைகள்
தேவை
தேவை
தேவை
தேவை