விஞ்ஞானி/இன்னொரு ‘இருந்தாலும்’

இதுவரை தீபாவளியை
எட்ட நின்னு பாத்துதான்
பழக்கம்.
அதுலயும் சௌகரியங்கள்
உண்டு
பட்டு புடவை விலைக்கும்
பருத்தி புடவை விலைக்கும்
உள்ள வித்தியாசத்த பற்றி
கவலை பட தேவையில்லை

பட்டாசு கொளுத்தற
பசங்களோட கூடவே ஓட
தேவையில்லை

பலகாரம் எப்படியும் நம்மள
தேடி வந்திடும் பயப்பட
தேவையில்லை

வாழ்த்துக்களையும்
நன்றிகளையும் மாறி மாறி
வரிசையா அனுப்பி
கைப்பேசியில் மூழ்கி கிடக்க
தேவையில்லை

அந்நாள் முதல் இந்நாள் வரை
தீபாவளி அனுபவத்தை
கவிதையா எழுத
தேவையில்லை

இருந்தாலும்
விற்காத புத்தகம் ஒன்று
பரிசாக கிடைக்குமென்றால்
கவிதை ஒன்று எழுதுவதில்
தவறுமில்லை.