விஞ்ஞானி/கவியரங்கம்

கவியரங்கத்தில் நான்
ஒலிபெருக்கி முன்
ஆவேசமாக

கடவுளை பற்றி எழுத
மாட்டேன் என்றேன்
யாரும் அதை மதித்ததாக
தெரியவில்லை

காதலை பற்றி எழுத
மாட்டேன் என்றேன்
யாரையும் அது பாதித்ததாக
தெரியவில்லை

துன்பங்களை பற்றி எழுத
மாட்டேன் என்றேன்
யாரும் அதை கவனித்ததாக
தெரியவில்லை

இன்பங்களை பற்றி எழுத
மாட்டேன் என்றேன்
யார் காதிலும் விழுந்ததாய்
தெரியவில்லை

உண்மையை பற்றி எழுத
மாட்டேன் என்றேன்
யாரும் கவலை பட்டதாய்
தெரியவில்லை

இறுதியாக என்று சொல்லி
எதை பற்றியும் இனி
எதையுமே எழுத மாட்டேன்
என்று முடித்தேன்.

பலத்த கைதட்டல் எழுந்தது.

()