சௌந்தர்ராஜன் எப்படி இந்திரா சௌந்தர்ராஜன் ஆனார்?

முகநூலில் : ஆர்.கந்தசாமி

ப: நான் பிறந்து வளர்ந்தது சேலத்தில் ஒரு சாதாரண மத்திய தரக் குடும்பத்தில். அப்பா பார்த்தசாரதி, டிவி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்த்தார். அம்மாவின் பெயர் இந்திரா. இளவயது முதற்கொண்டே எழுத்தார்வம் எனக்குள் இருந்தது. என் பெரியப்பா ஏ.எஸ். ராகவன் பிரபல எழுத்தாளர். ஆக எழுத்து என்பது எனது மரபுவழி விஷயமாகக் கூட இருக்கலாம். ஆனால் என் எழுத்துக்கு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் அது பா. செயப்பிரகாசம் எழுதி, சிகரம் என்ற சிற்றிதழில் வெளியான ‘இருளுக்கு இழுப்பவர்கள்’ சிறுகதைதான். அது என்னைப் பெரிதும் பாதித்தது. என்னுள் ஒரு விதையாக விழுந்தது. அப்போது சுஜாதா, புஷ்பா தங்கதுரை என்று பெண் பெயரில் எழுத்தாளர்கள் எழுதி வெற்றி பெற்றுக் கொண்டிருந்த காலம். எழுத்தாளர் மகரிஷிதான் என்னை எனது தாயின் பெயரான இந்திரா என்பதையும் பெயரில் இணைத்துக்கொண்டு ‘இந்திரா சௌந்தர்ராஜன்’ என்ற பெயரில் எழுத ஆலோசனை கூறினார். அந்தப் பெயரில் ஒரு கதையை எழுதி கலைமகள் குறுநாவல் போட்டிக்கு அனுப்பினேன். ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற அந்தக் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 1978ல் வெளியான. அந்த கிராமத்துக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கது. தொடர்ந்து எழுதினேன்.
-இந்திரா சௌந்தரராஜன் பதில்

நன்றி: தென்றல்