கோசின்ரா கவிதை

சாதிக்கெதிரான ஒரு கவிதையை காதலித்தேன்
அந்த கவிதையிலிருந்த
ஒரு பெண்ணையும் காதலித்தேன்
ஒரு நாள் கவிதையோடு பேசிக்கொண்டிருந்த போது
அந்தப்பெண்ணும் வந்தாள்
கவிதையின் குலம் கோத்திரம் பற்றி சொன்னேன்
அவள் என்னுடைய குலம் கோத்திரம் கேட்டாள்
நான் சொன்னேன்
அப்புறம் அவள் விடை பெற்று சென்று விட்டாள்
பிறகு அவளுடைய கவிதையும்
ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமல் போய் விட்டது
நீண்ட நாளைக்குப்பிறகு அவளை சந்தித்தேன்
தன் பெண்ணுக்கு தன் சாதியிலே
மாப்பிள்ளை பார்த்திருந்தாள்
அப்படியே அவளுடைய கவிதைக்கும் ,