ஒளவையார் பாடல்கள்

பொன்மழை பெய்யுமாறு வருணனை வேண்டுதல்

கருணையால் இந்தக் கடல்உலகம் காக்கும்
வருணனே, மாமலையன் கோவல் – திருமணத்தில்
முன்மாரி பெய்யும் முதுவாரி யைமாற்றிப்
பொன்மாரி யாகப் பொழி.

கடல் சூழ்ந்த இந்த உலகத்தைக் கருணையுடன் காக்கும் வருணனே!. மலையமான் திருமுடிக்காரியினது திருக்கோவலூரில் நடைபெறும் திருமணத்தின் போது, கடல் நீரை முதலில் நீ கொண்டு பின் மழையாகப் பொழிவதை மாற்றிப் பொன் மழை பெய்யச் செய்வாயாக.

என் குறிப்பு

ஔவையார் வர்ணனை வேண்டிக்கொண்டு பொன் மழையைப் பெய்ய சொல்கிறார். இதெல்லாம் சாத்தியமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் மழை பெய்ய வேண்டிய சமயத்தில் பெய்தாலே பொன் மழைதான்.