
புருவ மத்தியில்
என்னை
நிற்க வைக்கிறாய்.
இமைகளின் மஞ்சத்துள்
என்னை
இருக்கச் சொல்கிறாய்.
மூக்குத்திக் கதிர்வீச்சில்
என்னை
மூச்சுவிடச் சொல்கிறாய்.
விழியிரண்டின் கரையோரம்
என்னை
நடைபயிலச் சொல்கிறாய்.
மெல்லிதழ்களின் பெருஞ்சுழிப்பில்
என்னை
கவிதை குவிக்கச் சொல்கிறாய்.
அத்தனைக்கும் நீயே கதி.
என்
ஆயுளுக்கும்
நீயே என் சகி.
நேற்று இன்று நாளை
அன்று இன்று என்றென்றும்
இப்பிறவி
முப்பிறவி
ஏழேழு ஜென்மமென
எத்தனை எத்தனை
பிறப்பெடுத்து
நான்
புறப்பாடானாலும்
அத்தனைக்கும்
எனக்காய்
கிருஷ்ண துலாபார
ஒற்றைத் துளசியாய்
தோன்றி
மகத்துவப் படுத்துகிறாய்
என்
எளிய வாழ்வுதனை!

அருமை அழகு சிறப்பு!
வாழ்த்துகள்!