
தத்தித் தவழ்ந்து
எழுந்து நடப்பதாகத்தான்
இருந்தது
பால்யத்தின்
தொடக்கம்
குழந்தைத்தனமாக
யாவரையும்
ஈர்த்து.
இப்பொழுதும்
தத்தித் தவழ்ந்து தான்
எழுந்து நடக்க முடிகின்றது.
அந்தக் கல்லமின்மையை
கைவரப் பெறாத
முதிர்ந்த குழந்தையாக
இயலாமையின்
இறுதியில்.
யாவருக்கும்
பாரமென
அழுத்தி.
*
.

👍நன்று.
கல்லமின்மையைக் “கள்ளமின்மை” என்று திருத்தலாமோ