
தத்தித் தத்தி தவழ்ந்து வா !
தாவித் தாவி
ஆடி வா !
குண்டு கண்கள்
சிமிட்டியே
குதூகலமாய்
குதித்து வா !
பொக்கை வாய்
சிரிப்போடு
உலகை மயக்க
ஓடி வா !
உன் கன்னக் குழியின் அழகினை
கண்டு களிக்க
அசைந்து வா !
குழந்தையும் தெய்வமும்
ஒன்றெனவே உலகிற்கு
உணர்த்த வா !
உன்னுள் இருக்கும்
குழந்தைமை
உயிர்ப்போடு
இருக்கட்டும் !
14/11/2024
