
கண்மணி என் கண்மணி
கண்மணி என் கண்மணி
கண்ணில் காணும்
மின்னல் உனது
புன்னகை தானே
கன்னம் தீண்டும்
ஈர விரல்கள்
பனித்துளி தானே
மெல்ல தழுவும்
தென்றல் உனது
தொடுதல்கள் தானே
நான் கவலை மறந்து
சிரிப்பதும் உன்
அருகினில் தானே
கண்மணி என் கண்மணி
என்னிதயம் வருடும்
கீதம் உனது
மழலைகள் தானே
நான் சின்னபிள்ளை
ஆனது உன்
குறும்பினில் தானே
என் காயம் ஆற்றும்
மருந்து உனது
வருடல்கள் தானே
இனியின்பம் தரும்
சொந்தம் என்றால்
நீ மட்டும் தானே
கண்மணி என் கண்மணி

ஆகா மிகச் சிறப்பு!