அழகியசிங்கர்/குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் இன்று
பிரேயர் வகுப்பில்
நிற்கவில்லை
என்று ஓடிவந்து
வகுப்பில் பதுங்கி இருந்த
என்னை
அடிக்க வந்தார்
தலைமை ஆசிரியர்

நான் அன்று கலந்து
கொள்ளவில்லைதான்

என்னை அடிக்க
வேண்டுமென்ற
அவர் வன்மத்தை
நினைத்து வியந்தேன்

கையில் பிரம்படியின்
வலியைப் பொறுத்துக்கொண்டு..