ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 85/அழகியசிங்கர்

14.11.2024 – வியாழன்

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி: இந்த முறை விருட்சம் வெளியீடாக 20 புத்தகங்களுக்கு மேல் வரும் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். புத்தகங்களைத் தவிர விருட்சம் இதழ்களும்.
ஜெகன் :  என்ன திடீரென்று.
மோகினி :  உங்களால் முடிகிறதா?. 
அழகியசிங்கர் : ரொம்ப நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். முயற்சியும் செய்தேன். இதுவரை 16 புத்தகங்களை அச்சடித்து வைத்துள்ளேன்.
மோகினி :  எல்லாம் குறைவான பிரதிகள் கொண்ட புத்தகங்கள் இல்லையா?
அழகியசிங்கர் : வேறு வழியில்லை.  இன்றைய தமிழ் சூழ்நிலையில் மிகக் குறைவான பிரதிகளைத்தான் அச்சடிக்க வேண்டும். குறிப்பாகக் கவிதைகளை அப்படித்தான் அச்சடிக்க வேண்டும்.
ஜெகன் :  ராஜ் கௌதமன் இறந்து விட்டாரே? 
அழகியசிங்கர்:  நம் குழு சார்பில் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெகன் : நீங்கள் அவரைச் சந்தித்தது உண்டா? 
அழகியசிங்கர் : இல்லை. கூட்டங்களில் பார்த்திருக்கிறேன்.அவர் நாவல் சிலுவையின் சரித்திரம் வாங்கி வைத்திருக்கிறேன்.
மோகினி :  படிக்கவில்லையா?
ஜெகன் :  அவ்வளவு சுலபமாக நீங்கள் புத்தகங்களை எடுத்துப் படிப்பதில்லை.
மோகினி :  மறந்து விடுவீர்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான்.  இப்படிப் பல புத்தகங்களை நான் படிக்காமல் வைத்திருக்கிறேன்.  ஆனால் இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். சமீபத்தில் 10 நாவல்களைப் படிக்கக் கொடுத்துச் சிறந்த மூன்று நாவல்களைத் தேர்ந்தெடுக்கக் கொடுத்தது ஒரு பதிப்பகம். சவாலாக எடுத்துக்கொண்டு  நானும் முழுவதும்  படித்துத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன்.  அது ஒரு நல்ல அனுபவம். எல்லா நாவல்களைப் பற்றியும் குறிப்புகள் எடுத்துப் படித்தேன்.இல்லாவிட்டால் எனக்கு ஞாபகத்திலிருந்து போய்விடும்.
ஜெகன் : பெரிய முயற்சி செய்தால்தான் இதெல்லாம் சாத்தியம்.
அழகியசிங்கர் : ஆமாம்.
மோகினி :   நீங்க நடத்தும் கூட்டத்தில்  அசடு நாவலை எடுத்துப் பேசினீர்கள்.
அழகியசிங்கர் : ஒரு மாற்றத்திற்கு அப்படி எடுத்துப் பேசினோம். நல்ல முயற்சியாக இருந்தது.  எல்லோரும் நன்றாகப் பேசினார்கள்.
மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.

எழுதியது இரவு 10.34