ஷண்முக சுப்பையா/திருடர்கள்

திருடன் ஒருவன்
குருடன் வீட்டில்
திருடப் போனான்.
முடிந்த மட்டும்
திருடிவிட்டு
திரும்பிவந்து
திருட்டுப் பொருளை
எடுத்துப் பார்த்தால்
எல்லாம்
திருடன் வீட்டில்
திருட்டுப் போன
திருட்டுப் பொருள்.

One Comment on “ஷண்முக சுப்பையா/திருடர்கள்”

Comments are closed.