ஷண்முக சுப்பையா/நாட்குறிப்பு

காலையில் எழுந்து
கடனை முடித்து
பாடம் படித்து
உணவருந்தி
பள்ளி சென்று
கற்பன கற்று
திரும்பி வந்து
ஆடிக்களித்து
வீடு சென்று
பாடம் படித்து
துயின்றிட
சென்றேன்.
என்று
என்றும்
இதுவே
எழுதுவதென்றால்
எழுதுவதெதற்கோ
நாட்குறிப்பு.