ஷண்முக சுப்பையா/கப்பல்

கால மழை வந்திட
சாலைச்சிறார்
சிலர் கூடி
காகிதக் கப்பல்
பல செய்து
கட்டெறும்பு சிலதைப்
பிடித்தவைதனில்
அடைத்து
சாக்கடை நீரில்
ஒழுகவிட்டு
அவை போகிற போக்கைப் பார்த்து
உவகை மிக்குடையராகி
கூக்குரலிட்டுக்
கூத்தாடினரே