வைதேகி/கவலை

பக்கத்து வீட்டு மதில் சுவரில்
நினைத்துக் கொண்டாற்போல்
கண்ணாடிச் சில்லுகள்
முளைத்திருந்தன
என் கவலையெல்லாம்
அவ்வப்போது….
எதையாவது தின்று விட்டு
ஒய்யாரமாய் வந்தமர்ந்து
அலகு தீட்டிக் கொண்டிருக்கும்
தவிட்டுக்குருவி எங்கு செல்லும்?

3 Comments on “வைதேகி/கவலை”

Comments are closed.