பொழுது

வைதீஸ்வரன்

தெரு முனையில்

விடிவை எழுப்பி வரும்

பால்க்காரிக் குரல்

வாசற்படியில்

எனக்கொரு கோழியாகும்….

ஒளிகலந்த இருளைக்

கொட்டவிகளால் அளந்தவாறு

அவள் கொட்டும் நீரில்

பால் நிறம் கண்டு

அரைக் கண் கனவுடன்

சமையலறையில்

வானம் பார்த்து நிற்பேன்…

திறந்த வானுக்கு மேடை கட்டும் மேகங்களை

பார்வை சுவைக்கும் வேளை

பாத்திரத்தில் ஒரு நிலவு

பரவசமாய் கத்தும்!…….

நான் அவசரமாய் இறங்குவேன்

அடுப்பங்கரைக்கு.

2 Comments on “பொழுது”

Comments are closed.