லக்ஷ்மி ரமணன்/முகக்கவசம்

கோயிலுக்குச்செல்லும் வழியில் எதிர்ப்பட்ட இளம்பெண் தங்கள் வீட்டில் வெலைசெய்யும் சரளாஎன்பதை அவள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தாராவால் உணரமுடிந்தது.
ஆனால் அந்தப்பெண் சரளா கண்டுகொள்ளாதவளாக முகத்தைத்திருப்பிக்கொண்டு. ஏன் போனாள் என்று தாராவுக்குப்புரியவில்லை. இவ்வளவிற்கும் அவளை ஒருவேலைக்காரியாகப்பார்க்காமல் தாராவும் மற்றவர்களும் வீட்டுமனுஷியாகத்தான் நடத்தினார்கள்.
அவளுக்கு ஒருபிரச்சினைஎன்றால் வரிந்துகட்டிக்கொண்டு உதவத் தயாராகிவிடுவார்கள் என்று சொல்லலாம்.
அப்படி இருக்கையில் தன்னைக்கண்டுகொள்ளாமல் சரளா போனது தாராவுக்குவியப்பையும் உறுத்தலையும் அளித்தது.
தான் முகக்கவசம் அணிந்திருந்ததால்சரளாவுக்கு அடையாளம் தெரியவில்லையோ?
அக்கம்பக்கத்தில் நோய்தொற்று அதிகம் இருப்பதாகக்கேள்விப்பட்டு தாரா அது கொரோனா காலம் இல்லாவிட்டாலும்
முகக்கவசம் அணிந்து கொண்டுதான் வெளியேபோவாள். சரளாவுக்கு அது தெரியும்.பார்த்திருக்கிறாள். அப்படி இருக்கையில் ஏன் இந்தப்
பாராமுகம்?
நெஞ்சைஉறுத்திய கேள்வியைதூக்கிப் போட்டுவிட்டு கோயிலுக்குப்போய் தரிசனம்முடிந்தபின் வீடுதிரும்பி தன் வேலைகளில்
ஈடுபடத்துவங்கியபோது…வாயில் மணி அடித்தது. யார் வந்திருப்பார்கள் என்று யோசித்தவாறு தாரா கதவைத்திறந்தபோது….
“என்னைமன்னிச்சிடுங்கம்மா” சரளா குனிந்து தன் காலைத்தொட்டுவணங்கியதைக்கண்டதும் தாரா திகைத்துப்போய்”மன்னிக்கணுமா
எதுக்கு?”என்றாள்.
கொஞ்சநேரம் முன்னால் வழியில் உங்களை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் போனேன் காரணம் புரியாமல் நீங்கள் பதட்டமாகியிருப்பீங்க.நேற்று நடந்த சம்பவம்தான் அதுக்கு காரணம். எங்க வீட்டருகே இருக்கிறசுருதி என்கிற பெண் இப்படிப்போகும்வழியில்தான் வேலைபார்க்கிறவீட்டு எஜமானியை சந்திக்க நேர்ந்து சிரித்துப்பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த இரண்டு போக்கிரிகள் அவளைப்பின் தொடர்ந்து சுருதி வேலைபார்க்கிற இடத்தில் போய் மணிஅடித்ததும் அந்த வீட்டிலிருந்த வயதானவள் வந்து கதவைத்திறந்திருக்கா.
சுருதிக்குப்பின்னால் நின்றவர்கள் உடனே பாய்ந்து மயக்கமருந்து தடவிய கைக்குட்டைகளை அவர்கள் முகத்தில்வைத்து அழுத்தி மயங்கி கீழேவிழவைத்துவீட்டுக்குள்நுழைந்ததுடன் நகைகளை கொள்ளையடிச்சுட்டாங்க.
அதுமாதிரி எதுவும் உங்களுக்கு நடந்துடக் கூடாதுன்னுதான் நான் அப்படிபோயிட்டேன்.
உங்களுக்கு எந்த ஆபத்து ன்னாலும் அதை என்னால் தாங்கிக்கமுடியாது” கண்களை நீர் மறைக்க சரளா சொன்னவார்த்தைகள் தாராவின் மனதை நெகிழவைக்க சரளாவை
அவள் அன்புடன் அணைத்துக்கொண்டாள்.