
பத்துப் பைசா
துட்டொன்று
பாதையில் எங்கேனும்
கிடக்காதாவென்று
பாதையிலே கண்ணாக
பட்டணத்தைச்
சுற்றி வந்தேன்.
கண்கள் களைத்திடவே
*’ கடவுளே உனக்குக்
கண்ணுண்டா?’
என்று
கேள்வி ஒன்றை
விட்டெறிய
வட்ட வடிவமாய்
கால் ரூபாய் துட்டொன்று
பதிந்த பால் நுரைபோல்
ஒழிந்த ஒரு மூலையிலே
ஒளிவிடக் கண்டேன்.
உண்டுண்டு
கடவுளுக்கு
நிச்சயமாய்
கண்ணுண்டு”
என்றென்னுள்ளத்தே
உளறி விட்டு
மெள்ள மெள்ள
அத்துட்டண்டை சென்றால்
துட்டு துட்டல்ல
துப்பலெனக் கண்டேன்.
