விஞ்ஞானி/கருணை

கையில் ஒரு சிற்றெரும்பு
ஓடியது
கருணையுடன் விரட்டி விட
நினைத்தேன்
அதற்குள் கடித்துவிட்டது

அடிக்காது தட்டி விட்டு விட்டு
கடிவாய் கடுகடுக்க அது
ஓடி மறைவதை பார்த்துக்
கொண்டு இருந்தேன்

என்ன என்ற நண்பனிடம்
நடந்ததை சொன்னேன்.

அவன் பதிலுக்கு
அது இந்நேரம் தனது
குடியிருப்புக்கு போய்
ஒரு ஆள் சிக்கியிருக்கான்
நமக்கு சேதாரமில்லாம
சேமிக்கலாம் வாங்கன்னு
படை திரட்டிக்கொண்டு
இருக்கும் என்று
சொல்லி சிரித்தான்

நான் கடைக்கு
புறப்பட்டு விட்டேன்
எறும்பு மருந்து வாங்க.