இன்னுமொரு காலை..

பரணி & மஹேஷ்.

காலை நேரப் பனித்துளிகள்
தேவலோகம்
அழைத்துச் செல்லும்…

பெயர் தெரியாப் பறவையின்
தூரத்துச் சங்கீதம்
வழி நடைத் துணை வரும்.

காற்றில் வரும்
பள்ளிக்கூடப் ப்ரேயர் பாடல்
காலம் கரைத்து பின்னோக்கிக்
கூட்டிப் போகும்.

அகாலமாய் வெளிவந்து
புதர் ஏகிய நீளப் பாம்பு
கடந்த சாலையைக்
கானகமாய் மாற்றும்.

மெயில் வந்த சேதி
சொல்லி அலறும் கைபேசி
பூலோகம் இழுத்து வரும்
இன்னுமொரு காலை..

3 Comments on “இன்னுமொரு காலை..”

  1. தேவ லோகம் சென்று வந்த அனுபவத்தை அனைவருக்கும் பகிர்ந்து சுவைக்கச் செய்த மகேஷ் பரணிக்கு வாழ்த்துக்கள் பனி மூட்டம் தொடரட்டும்

Comments are closed.