பட்டுக்கோட்டை தந்த பட்டுக்கோட்டை பாடல்கள்/போரைத் தடுப்போம்

மனிதரை மனிதர்
சரிநிகர் சமமாய்
மதிப்பது நம் கடமை
வள்ளுவப் பெருமான்
சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை,

உழைப்பை மதித்து
பலனைக் கொடுத்து
உலகில்போரைத் தடுத்திடுவோம்,
அண்ணன் தம்பியாய்
அனைவரும் வாழ்ந்து
அருள்விளக் கேற்றிடுவோம்.

[இரும்புத் திரை, 1960]