
தேவையானவை:
வரகரிசி – 200 கிராம், பச்சரிசி – 50 கிராம், முழு உளுந்து – 100 கிராம், மிளகுத்தூள், அவல் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியுடன் அவல் சேர்த்துக் களைந்து ஊறவைக்கவும். வரகரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே ஊறவிடவும். அனைத்தும் 4 மணி நேரம் ஊறினால் போதும். எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து வைக்கவும். மாவு புளித்துப் பொங்கியவுடன் மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
