
அம்மா உன்னிடம் யாராச்சும் நான்இந்தமுறை
பரீட்சையில் எத்தனை மார்க வாங்கியிருக்
கேன்னு கேட்டால் சொல்லாதே என்ற தன்
மகள் வித்யாவை பவானி குழப்பத்துடன்
பார்த்தாள்.
என்னபார்க்கிறே?
உனக்கு என்னாச்சு ஏன் அப்படிச்சொல்லறே?
சொல்லக்கூடாதுன்னு தடைபோடரமாதிரி
நீ அப்படி ஒண்ணும் குறைவாக மார்க்
வாங்கலியே.
அம்மா காரணம் இல்லாமே நான் எதையும்
சொல்லமாட்டேன்னுஉனக்கேதெரியும்.
ஆமாம்.
எதுக்கு என்னை கேட்கிறே?
இதுக்கு காரணம் என்னன்னு தெரியலியே.
எல்லா சப்ஜெக்டிலும் தொண்ணுருக்குமேல்
மார்க்வாங்கி இருக்கே. நினைச்சா எனக்கும்
அப்பாவுக்கும் எத்தனை பெருமையாக
இருக்குன்னு உனக்கேதெரியும்.
அந்தப்பெருமையை உன்னோடுமட்டும்
வெச்சுக்காமல் எதுக்கு மத்தவங்களோடு
ஷேர்பண்ணணும்?
நீஎன்ன சொல்லறேன்னே புரியலே.
என்னோடு படிக்கிறவங்களின் பெற்றோர்
களை உனக்குத்தெரியும்.என்னை சுட்டிக்காட்டி அவங்ககங்கள் வாரிசுகளை
பார்த்தாயா அதெப்படி வித்யா மட்டும்சூப்பரா
மார்க் வாங்கியிருக்கா?ஏன் உன்னால் அது
முடியல்லே .படிக்கத்தானே ஸ்கூல் போகிறே?
கவனம் எப்போதும் மொபைலில்தானா?
அறிவுகெட்டவளே. அதுஇதுன்னு திட்டிஅவங்கமனசை புண்ணாக்கிஅழவைக்
கிறதை என்னால் தாங்கிக்கமுடியாது.என் சினேகிதிகள் என்னால் மன உளைச்சலுக்குள்ளாவதை நான் விரும்ப
வில்லை. நான்எத்தனை மார்க்வாங்கினேன்னுஉனக்கும் அப்பாவுக்கும் தெரிஞ்சால் போதாதா?ஊருக்
கெல்லாம் எதுக்குத்தெரியணும்?
தன்மகள் வித்யா இத்தனைதன்னடக்கமான
பெண்ணா என்றுநினைத்தபோதுபவானிக்கு
மிகவும் பெருமையாக இருந்தது.
.
