வி.வி. கலைச்செல்வி/விட்டுவைத்தலும் கடனே


நேற்று வழக்கத்தை விடவும் காற்று அதிகம் .
நிறையப் பொருட்கள்
அதனதன் இடம் மாறி போய்விட்டது.

இடம் மாறுதல்
சில நேரம் சங்கடம்
சில நேரம் சந்தோசம்.

ஏனித்தனை வேகம் காற்றே என்றேன்.?

ஒன்றும் சொல்லாத காற்று
ஒரு பறவையின் இறகு
ஒரு உதிர்ந்த இலை
ஒரு பழைய கவிதைப் புத்தகத்தின் கிழிந்த தாள் ஒரு துண்டு கிழிசல் துணி
என்று கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது .

நான் காற்றுக்கு கடன்காரி.


தாராபுரம்