
ஓடும் மேகங்கள் அழகு
ஆடும் அலைகள் அழகு
வட்ட நிலவும் அழகு
கொட்டும் மழையும் அழகு
விண்ணில் மீன்கள் அழகு
மண்ணில் மலர்கள் அழகு
வான வில்லோ அழகு
வானத்து மின்னல் அழகு
மலைகள் என்றும் அழகு
சிலைகள் கோயிலில் அழகு
பச்சை வயல்கள் அழகு
பச்சைக் கிளிகளும் அழகு
அருவிகள் குதித்தல் அழகு
குருவிகள் கூட அழகு
நதிகள் ஓடுவது அழகு
உதிக்கும் பகலவன் அழகு
மூடு பனியும் அழகு
காடுகள் என்றும் அழகு
மயிலின் ஆட்டம் அழகு
குயிலின் கருமை அழகு
அழகுக்கு பஞ்சம் இல்லை
அழகை ரசிக்கப் பழகனும்
அழகை ரசித்தால் போதும்
அழகாய் தெரியும் வாழ்க்கை
