
பாண்டி விளையாட்டின்
முதல் உப்பை நான்
கடவுளுக்குக் கொடுத்தது
கிடையாது
முதல் பல் விழுந்த போது
சாணியில் பொதிந்து
சொர்க்கம் நோக்கி
எறிந்தது கிடையாது
ஒரே ஒரு தடவைதான்
விட்டில் பூச்சிகளைப்
பக்கத்துக் கொன்றாய்
நூலில் கட்டிப் பரிதவிக்க
விட்டிருக்கிறேன்
மருத மர நிழலில் மீட்டாத
த ண்டவாளச் சோகங்களை
எனக்கேன் நிரந்தரித்தாய்
சசி
(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)
