நாகேந்திர பாரதி/புகைப்படம்

வீட்டுக்கு வெள்ளையடிக்கக்
கழற்றியதும் தெரிந்தது

மாலையோடு மாட்டியிருந்த
புகைப்படத்தில் தூசி

சிந்திய கண்ணீரைச்
சேர்த்துத் துடைக்கையிலே

தண்ணீர் தேவையில்லை
துண்டை ஈரமாக்க

தூசி தொலைந்தது
சிரித்தபடி அப்பா