சசிகலா விஸ்வநாதன்/ஆறுதல்

ஆயிற்று; இன்றுடன் மணிகண்டனின் காரியம் எல்லாம் முடிந்து அவரவர் இல்லம் திரும்பியாயிற்று. அண்ணா- மன்னி அப்பா, இவர்கள் மட்டும்;இன்று என்னுடன். நாளை அவர்களுடன் கிளம்ப வற்புறுத்திக் கூப்பிடுகிறார்கள். வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வாங்கி ஒரு மாறுதலுக்கு பெங்களூரில் வந்து அவர்களுடன் இருக்க வேண்டுமாம். “என்னைத் தனியாக விடுங்களேன்” என்று உரக்க கத்தலாம் போல் இருந்தது ஞானத்திற்கு.” எந்த மாறுதலும், திசை திருப்புதலும் வேண்டாம். இங்கு மணியின் பெற்றோரோடு இங்கேயே நான் நலமாக இருப்பேன்.
மணியின் பெற்றோருக்கு உகந்த மகளாய் என் வாழ்வு இன்பமாய் இங்கேதான் அவன் பெற்றோர், மாறுதல் தேடி எங்கே போவார்கள்? எங்கள் எல்லோருக்கும் தேவை ; ஆறுதல் தான்; மாறுதல் அல்ல.நான்கு வயதான ஞான மணி, ” அம்மா! பாட்டி உங்களை கூப்பிடுகிறார்கள்,” என்று சொல்ல, அவள் மணிகண்டனின் தாயார் அறைக்கு அவனுடன் செல்ல எழும்ப; அவள் அண்ணி முகத்தை சுளிப்பதைக் கண்டும் காணாதது போல்….