
அப்பொழுது
என்னுடன் நீ
வரவில்லை அல்லவா?
அப்பெர்ழுது
இவ்விடமே இருந்து கொள்
காலம் கழுவிய
வழுக்குப் படிகள் மேல்
கரு நாய் நினைவு ஊளையிட
வான் நுழைந்த குடிசையில்
தூண்கள் நிற்கும்
மணல் வெளிக் காற்று
குதிரையை ஓட்டும்
அலைகள் படம் விரித்து
ஓவென்று இரைந்து
நடமா யெழுந்து
தண்டனிடும்
சிதையின் புகைச் சுருள்கள்
தேடி என்னை தெரிவித்துக் கொள்ளும்
காலன் இறந்திடுவான்
கழியும்
நீண்ட வழியும் பலங்களும்
துணையுண்டு
செல்கின்றேன்
(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)
