செ.புனிதஜோதி

பெயர்தெரியாத ஒருத்தி
அவள் தலையில்
செவ்வரளி சூடிச்செல்கிறாள்

அவளுக்குப் பிடித்த அம்மனும்
எனக்கு பிடித்த அம்மனும்
செவ்வரளிக்குள்
சேர்ந்து பயணிக்கின்றனர்

இப்போது
என் கண்களுக்குள்
அம்மனைச் சுமக்கும்
பொன்னூஞ்சலாய்.
ஆடிக்கொண்டிருக்கிறது
அந்தச் செவ்வரளி