நாகேந்திர பாரதி/தலைமுறைகள்

வாழ்க்கையை
அதன் போக்கில் வாழ்ந்து விட்டு
போய்ச் சேர்ந்தது
ஒரு தலைமுறை

தன் போக்கில் வரவழைக்க
முயற்சி செய்தது
ஒரு தலைமுறை

யார் போக்கிலோ விட்டு விட்டு
குழம்பி நிற்கிறது
ஒரு தலைமுறை