
கைத்தடிக்குப் பாதுகாப்பாய்
வாழும் வயது
காலாற நடந்திருந்தேன்
மாலைக் கதிரொளியில்
மாறிப் பொன்னா யொளிர்ந்த
நரை தலையில் படிந்தன
கிளை விட்டிறங்கும் சில மலர்கள்
மன்னிக்கலாம்! வேனிலின்
வெட்கப்படாத இந்த ஆசைகளை
(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)
