வளவ. துரையன் /கிளறுதல்

     குப்பையைக் 
      கிளறினால்தான் 

கோழிக்கு இரை
கிடைக்கிறது.

அடிமன ஆழத்தை
அவ்வப்போது
கிளறினால்
மேலே வருவன

சிலநேரம் துன்பங்கள்
மட்டுமன்றி இன்பங்களும்.

அதிகமாகக் கிளறுவது
அனைவரது சினத்தையும்

அடியோடு எழுப்பிவிட்டு
அருமை உறவும் நட்பும்
அழிந்தொழியும் அன்றோ?

இருந்தாலும்
மேலே மிதக்கின்ற
பூக்களின்
மினுமினுப்பை நம்பலாமா?

அடியில்தானே
கசடுகளும் அமிழ்ந்துள்ளன.

நல்ல கவிதை
இல்லையென
ஒதுக்கித் தள்ளியதை

நாள்கழித்து இன்னும்
நன்றாகக்
கிளறிப் பார்த்தால்
நற்கவிதையாகத் தோன்றுமாம்.
T

One Comment on “வளவ. துரையன் /கிளறுதல்”

Comments are closed.