
காய்ந்த சுல்லி களையும்
உலர்ந்த புல்லிதழ்களையும்
ஒவ்வொன்றாக
எடுத்துவந்து வீட்டுள்
சிறுகூட்டில்லத்தைக்
கட்டிமுடித்த
சின்னக்குருவியே …
என் வீட்டு இளைய மகள்
கருவுற்றநேரத்தில்
நடக்கும் நல்நிகழ்வாய்
மகிழ்ந்தார்கள்.
சில நாட்களில்
குருவியின்
ஒற்றையொலி
குஞ்சுகளின்
கூட்டொலியானது.
உன் உறவுகள்
ஒவ்வொன்றாய்
மேலே பறந்தன.
ஒருநாள் உன்கூடும்
மின்விசிறி காற்றில் பறந்து கீழே விழுந்தது.
பறவையின்
ஒலியிடத்தைப்
பேச்சொலிகள் பிடித்தன.

தலைப்பு அருமை