
இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்களைக் கொண்டு வந்தேன். முக்கியமாக என்னுடைய நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும். இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன்.

ஆனால் யார் யார் எந்தந்தப் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறார் என்ற விபரக் குறிப்பைக் கொடுக்காமலிருந்து விட்டேன்.
இப்போது விபரக்குறிப்பைத் தருகிறேன்.
அழகியசிங்கரின் நான்குப் புத்தகங்கள்

- அஞ்சல் அட்டை கதைகள் அல்லது துரித கதைகள் – பேசுவோர் திருப்பூர் கிருஷ்ணன், அமுதசுரபி ஆசிரியர்.
- துளிகள் (தொகுதி 4) – கட்டுரைத் தொகுப்பு – பேசுவோர் : டாக்டர் பாஸ்கரன்
- வாசிப்போம் வாசிப்போம் – தொகுதி 2 – கட்டுரைகள் -பேசுவோர் : கிரிஜா ராகவன், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர்
- வெளியே மழை நின்று விட்டது – கவிதைத் தொகுப்பு- நாகேந்திர பாரதி
லாவண்யா சத்தியநாதன் சிறுகதைத் தொகுப்பு - ரயிலில் ஒரு பயணி – லாவண்யா சத்யநாதனின் சிறுகதைகள் – பேசுவோர் : ராஜேஸ் சுப்பிரமணியன்
கூட்டம் நடக்குமிடம் : அண்ணா நூலகம், கோட்டூர் புரம் – இரண்டாவது மாடி
நாள் : 24.12.2024 (செவ்வாய்க் கிழமை)
அனைவரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
அழகிய சிங்கர்
லாவண்யா சத்யநாதன்
