
இருளைக் கண்டுதான்
இங்கே எல்லாரும் அச்சப்படுவார்கள்
ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம்
தயக்கம் ஊட்டுகிறது.
இருளுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதைவிட
வெளிச்சத்துக்கு இருள் தருவது அரிதான ஒன்று.
வெளிச்சத்தின் நிறம் வெண்மை என்கிறார்கள்.
உற்றுப் பார்த்தால் அதன்
உள்ளே ஒளிந்திருக்கும் எல்லாமும் தெரிய வரும்
வெளிச்சம் என்பது நமக்கு நாமே
ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு போதை விளக்கு.
எப்பொழுதும் அது அணைந்துவிடலாம்.
எனவேதான் வெளிச்சத்தைக்
கண்டு நான் அச்சமடைகிறேன்.
