வினோத் பரமானந்தன்/இப்படித்தான்தினமும்…

எதையாவது எழுதிக்
கொண்டிருக்கிறேன்…

ஒரு அன்பை..ஒரு பிரிவை..

ஒரு நெகிழ்வை, ஒரு நிராகரிப்பை

சின்னதொரு தோல்வியை,
பெரிய வெற்றியை..

கையாட்டி கடக்கும்
குழந்தையை,

அதிகமாகப் போன
வத்தல் குழம்பின் காரத்தை,

இந்த அரசியலை..

ஆறிக் கொண்டிருக்கும்
காபியை..

என்னை நம்பி விடியும்
விடியலை…

கவிதையைத் தவிர்த்து
வேறெப்படி கொண்டாடுவது…

                   -