
28.12.2024
விருட்சம் வெளியீடாக வந்த இன்னொரு புத்தகம். க.நா.சு கதைகள். அசோகமித்திரன் கநாசு கதைகளைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார் :
இப்படித்தான் ஒரு தெளிவான ஆன்மிகச் சரடு க.நா.சு.வின் கதைகள் அனைத்திலும் காணக்கிடைக்கிறது. அவருடைய பாத்திரங்கள் அநேகமாக எல்லோருமே உயர்ந்த மனப் பக்குவம் அடைந்தவர்கள். அவர்களால் பெரும் நெருக்கடி நேரங்களிலும் ஆழமாகச் சிந்திக்க முடிகிறது. புற நிகழ்ச்சிகள் மிகச் சாதாரணமானவை. இருக்கும் ஒரு சிலவற்றையும் க.நா.சு. ஒதுங்கியிருந்து கூறும் பாணியால் நாடகமாக்கும் அம்சத்தை மிகவும் தணித்து வைத்துவிடுகிறார். இது ஒரு முக்கிய காரணம். அவருடைய கதைகள் வெகுஜன ரசிகத் தன்மைக்கு அப்பாற்பட்டிருப்பது. ஆனால் மனித இயல்பின் நுணுக்கங்களை அச்சமின்றி அறிய முற்படும் ஒருவனுக்கு க.நா.சு.வின் கதைகள் உற்ற வழிகாட்டியாக இருக்கும்.
விருட்சம் வெளியீடு 9 கதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்துள்ளது. 112 பக்கங்கள் உள்ள இப்புத்தகம் விலை : ரூ.120 தான். புத்தகக் காட்சியில் அரங்க எண் 675 ல் பாரதி நுழைவாயில் இந்தப் புத்தகம் கிடைக்கும்.
