
இருவர் நடந்து போனோம்
இருவர் எதிரில் வந்தனர்
அதிலொருவர் தெரிந்தவர்
போல தெரிந்தார்
கடந்து போகும் அந்த
நொடியில்
அவர் என்னை நோக்கி
புன்னகைத்தார்
நானும் புன்னகைத்தேன்
சின்ன முறுவலுடன்
எங்களை பார்த்தபடி
கடந்து போயினர்.
மனைவி கேட்டாள்
யார் அது என்று
தெரியவில்லை
ஆனால்
பார்த்த முகம் என்றேன்.
இருவர் மனங்கள் இதை
நம்பவில்லை
இருவரில்
ஒருவர் என் மனைவி
இன்னொருவர்
அங்கே அவரின் கணவர் .
