
தோல்விகள் தொலையட்டும்
வெற்றிகள் குவியட்டும்
முயற்சிகள் ஓங்கட்டும்
புதியநம்பிக்கை பிறக்கட்டும்
பாதைகள் திறக்கட்டும்
மாற்றங்கள் பிறக்கட்டும்
உறவுகள் சிரிக்கட்டும்
மகிழ்ச்சி பொங்கிப் பரவட்டும்
வீழ்ச்சி கனவாகட்டும்
புதிய எழுச்சி நனவாகட்டும்
வறுமை ஓடட்டும்
புதிய வலிமை பிறக்கட்டும்
எண்ணம் சிறக்கட்டும்
வாழ்த்துகள் குவியட்டும்
கொண்டாட்டடும் குதூகலமுமாக
ஒவ்வொரு நாளும்
ஒளிமயமாய் விளங்கட்டும்
இந்த புத்தாண்டு
ஒவ்வொரு தமிழர்களின்
உள்ளத்திலும்
புது இரத்தம் பாய்ச்சட்டும்!
