புத்தகம் அறிமுகம் 4/அழகியசிங்கர்

குறைந்தபட்சம் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதுதான் என் நோக்கம்.
என்னை மதித்துப் புத்தகம் அளிப்வருக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.
இரா.ம.சௌந்தர் புத்தகமான வேலிகள் தாண்டுவதற்கு அல்ல..
என்ற புத்தகம் எப்படிக் கிடைத்தது என்று சொல்கிறேன்.
புத்தகக் காட்சியில் 675 வது ஸ்டாலில் உட்கார்ந்திருக்கும் போது என் நண்பர் சந்தியா நடராஜன் எதிர்பாரதவிதமாய் வந்து கரகரவென்று என்னை அவர் ஸ்டாலுக்கு அழைத்துப் போய் இரா.ம.சௌந்தரின் வேலிகள் தாண்டுவதற்கு அல்ல என்ற சிறுகதைத் தொகுப்பை ஏர்வாடி ராதாகிருஷ்ணன் தர நான் பெற்று கொண்டேன்.
கதை வரிசையில் 25 கதைகள் இப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சந்தியா வெளியீடாக வந்துள்ள புத்தகத்தின் விலை : ₹ 250.
இப் புத்தகத்தின் கதைகளை வரும் பிப்ரவரி மாதம் சூம் மூலம் பேசுவதற்கு ஏற்பாடு செய்வதாக உள்ளேன்.

2 Comments on “புத்தகம் அறிமுகம் 4/அழகியசிங்கர்”

  1. தங்கள் பணி பாராட்டுதலுக்கு உரியது.
    வாழ்த்துக்கள் ஐயா..

    அன்புடன்
    இரா.ம.சௌந்தர்
    9444498789

Comments are closed.