அழகியசிங்கர்/நாய்க் குட்டி

துள்ளி ஓடிற்று
புத்தகக் காட்சி
நடைப் பாதையில்
ஒரு நாய்க்குட்டி

அதுக்கு
புத்தகங்கள் பற்றி
என்ன தெரியும்?

வேடிக்கைப்
பார்த்த எங்களுக்கு
என்ன தெரியும்
அதைப் பற்றி

விற்கப்படாமல்
இங்கே வீற்றிருக்கும்
புத்தகங்களுக்கும்
எதுவும் தெரியாது

2.1.2025 – 4.52

One Comment on “அழகியசிங்கர்/நாய்க் குட்டி”

Comments are closed.