அழகியசிங்கர்/துளி 225

03.01.2025

இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு 6 கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்து மாட்டிக்கொண்டிருக்கிறேன். இரண்டு தொகுதிகள் எழுத்து காலத்தில் எழுதிய தி சோ வேணுகோபாலன் கவிதைகள், சி.சு செல்லப்பா தொடங்கிய எழுத்து பத்திரிகைதான் முதன் முதலாக புதுக்கவிதைகளைப் பிரசுரம் செய்தது. அப்பத்திரிகையில் எழுத ஆரம்பித்தவர்தான் தி.சோ வேணுகோபாலன்.
கோடை வெயில் என்ற தலைப்பில் சி.சு.செல்லப்பா தி சோ வேணுகோபாலனின் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டு வந்தார். புதுக்கவிதைக்கு புது வழிக்காட்டியாக தி.சோ.வேணுகோபலன் இருந்தார்.
கோடைவெயிலுக்குப் பிறகு க்ரியா வெளியிட்ட மீட்சி விண்ணப்பம் என்ற கவிதைத் தொகுதியையும் சேர்த்து தி.சோ. வேணுகோபாலன் கவிதைகள் என்ற புத்தகத்தை உருவாக்கி உள்ளேன்.
100 பக்கங்கள் அடங்கிய இப் புத்தகத்தின் விலை ரூ.100 தான். புத்தகக் காட்சிக்கு பாரதி பாதையைத் தேர்ந்தெடுத்து வந்தால் 675 வது அரங்கத்தில் இந்தப் புத்தகம் கிடைக்கும்.
அல்லது 9444113205 என்ற தொலைப் பேசிக்கு குகூள் பேயில் ரூ.100 அனுப்பினால் இந்தப் புத்தகம் உங்கள் வீடு வந்து சேரும்.