விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார்.

சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை
என்று கூறி உள்ளார். இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும்.

கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதையில் அவர் சாதித்த சாதனைக்கு உயர்ந்த பரிசு கிடைத்திருக்க வேண்டும்!

கவிதை அனுப்புபவர்கள் கவனத்திற்கு:

கவிதை வந்து சேர வேண்டிய கடைசித் தேதி : 31.01.2025
கவிதை 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாகவோ நீளமாகவோ இருந்தால் கவிதை தேர்ந்தெடுக்கப் பட மாட்டாது.
கவிதைக்கு கட்டாயம் தலைப்பு இடம் பெற்றிருக்க வேண்டும்.தலைப்பில் லாத கவிதைகளைப் போட்டியில் சேர்க்கப் பட மாட்டாது.
ஒருவர் ஒரு கவிதை மட்டும் எழுதி அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் இருந்தால் நிராகரிக்கப்படும்.
ஹைக்கூ வடிவத்தில் எழுதப் படுகிற கவிதை, மரபு கவிதை தேர்ந்தெடுக்கப் பட மாட்டாது .
போட்டிக்கு புதியதாக எழுதப்பட்ட கவிதை அனுப்ப வேண்டும். ஏற்கனவே பிரசுரமான கவிதை அனுப்பக் கூடாது.
உங்கள் கவிதைத் தேர்ந்தெடுக்கப் பட்டால் சன்மானம் வழங்கப்படும்
கவிதைகள் தினசரி நவீன விருட்சம் ஆன் லைன் பத்திரிகையில் உடனே பிரசுரமாகும்.
அச்சு இதழிலும் பிரசுரமாக வாய்ப்புண்டு
கவிதை word document ல் அனுப்ப வேண்டும்.
கவிதை அனுப்ப வேண்டிய முகவரி : editorvirutcham@gmail.com
தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்கு சன்மானம் உண்டு.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் விருட்சம் இதழிலும், இணைய இதழ் daily.navinavirutcham.in இதழிலும் பிரசுரிக்கப்படும்.
கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி :
31.01.2025.