
இறந்துகிடந்த
பட்டாம் பூச்சியை
பூப் போல எடுத்துக் கொண்டு வந்தாள் பாப்பூ.
வண்ணங்கள் கலையாமல் இருந்தது
அது தூங்குவது போலத்தான் எனக்குத் தெரிந்தது
அதன் நான்கு கால்களிலும் ஈரம் காயாமல் ஒட்டிக் கிடந்தது
பெயர் தெரியாத பூவின் மகரந்தம்.
பாப்பூ சொன்னாள் இறந்துடுச்சும்மா .
ஆனால் நான்
மறுபடியும் சொல்கிறேன் அது பூப் போலத்தான் கிடந்தது.
தாராபுரம்
