மதுவந்தி/கோலம்

வெறும் புள்ளிகள்
வெறும் கோடுகளில்
ஒன்றுமில்லை.

புள்ளிகளையும்
கோடுகளையும்
இணைக்கிற
கரங்கள்
கரங்களை
இயக்குகிற
மனசு

அங்கே
பிறக்கிறது
கோலம்.