சசிகலா விஸ்வநாதன்/கோலம்

புள்ளி வைத்தவுடன்,
மனத்தில் விரியும்
ஒரு கோலம் அல்ல;
ஒன்பது கோலங்கள்.
ஒரு மயில்,
ஒரு குயில்,
ஒரு மலர்,
ஒரு மனத்தில்
உருவாகி;
வளைந்தும், நெளிந்தும்
மேலெழும்பியும்
கீழெறங்கியும்
புள்ளிகளை லாவகமாய் இணைக்கும் கரங்கள்
அனிச்சையாய்;
மனதின் இச்சையாய்.