மதுவந்தி/கோலம்

ஏ 703 பிளாட் அக்கா
பேப்பர் பில் பணம்
வாங்கப் போகையில்
கேட்டார்கள்,
நீ இரண்டு நாள் முன்னாடி பேப்பர்
போட வரலியா?

ஆமாம், எனக்கு வேற
வேலை , தம்பிய
போடச் சொன்னேன்.
ஏன் என்ன ஆச்சு?

வாசல் கோலம்
அழியாம பேப்பர்
போட்டுப் போவ நீ.

அன்னிக்கு கோலம்
மேலேயே பேப்பரப் போட்டு
அலங்கோலம் ஆயிடுச்சு.