
தரைத் தளத்தில் அழகான வீடு.
ஆசையாய் தேர்ந்தெடுத்த
கிழக்கு பார்த்த வீடு.
தினமும் அரிசி மா
கோலம்.
தாமரைப்பூவும் கிளியும் மயிலும் மானுமாக…
நன்றாகவே நடந்தது
குடி புகும் விழாக்கள்.
பின்னே வந்தது
பெரும் தலைவலி.
முதல் தளத்திற்கு
என் வீட்டு வாசல்
குப்பைத் தொட்டியாகியது
கோலங்கள் அலங்கோலம் ஆயின.
இரண்டாம் தளத்தார்கள்,
முற்றத்தை நீரிட்டு
சுத்தம் செய்ய,
என் வண்ணக் கோலங்கள் அழுது அழிந்தன.
மூன்றாம் தளத்தார்
வளர்க்கும் செடிகளின் கழிவு
என் முன் வாசலில்.
யாரிடம் முறையிட்டாலும்
பதில்” நான் இல்லை” என்பதே.
இந்த இல்லம் விட்டு
எங்கே செல்வது?
